• Download mobile app
06 Nov 2025, ThursdayEdition - 3557
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்திற்கு ஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்  –  ரஜினிகாந்த்

March 5, 2018 தண்டோரா குழு

தமிழகத்திற்குஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன் என நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார்.

சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரியில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் சிலையை திறந்துவைக்க நடிகர் ரஜினிகாந்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதையடுத்து,  இன்று ரஜினிகாந்த் எம்.ஜி.ஆர்.சிலையை திறந்து வைத்தார். பின், எம்.ஜி.ஆரின் சிலையைத் திறந்துவைத்த நடிகர் ரஜினிகாந்த், மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சிலைத்திறப்புக்குப் பின் மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய , நடிகர் ரஜினிகாந்த்,

மக்களுக்கு இடையூறாக பேனர் வைக்கக்கூடாது என்ற நீதிமன்ற உத்தரவை மீறிவிட்டோம். மக்களே எங்களை மன்னித்துவிடுங்கள்.எம்ஜிஆர் சிலை திறப்பதற்கான தகுதி எனக்கு உள்ளதா என்று தெரியவில்லை. எனக்கும், எம்ஜிஆருக்கும் இடையோன உறவை கூற விரும்பினேன், ஆனால் காலம் அமையவில்லை. பல்கலைக்கழக விழா, கட்சி மாநாடு போல மாறிவிட்டது.தமிழக அரசியல்வாதிகள் தங்கள் வேலையை சரியாக செய்யாததால் நான் அரசியலுக்கு வந்துள்ளேன். நான் என் வேலையை சரியாக செய்து வருகிறேன், 1996 முதல் அரசியல்வாதிகள் அவர்களது வேலையை சரியாக செய்யவில்லை. மக்களுக்கு நான் கடமை செய்ய வேண்டியுள்ளதால் தான், நான் அரசியலுக்கு வந்தேன். சாதி, மதமற்ற நேர்மையான அரசியலே ஆன்மிகஅரசியல்; உண்மையான ஆன்மிக அரசியலை இனி தான் பார்ப்பீர்கள். அரசியல் பாதை எனக்கும் தெரியும், பூ பாதை அல்ல. முள், கல், பாம்புகள் உள்ள பாதை.  கருணாநிதி, சோ ஆகியோரிடம் பேசி அரசியல் கற்றேன். அப்படித்தான் நான் அரசியலுக்கு வந்தேன்.நான் அரசியலுக்கு வந்ததை வாழ்த்த வேண்டாம், ஏளனம் செய்யாதீர்கள்.தலைவர்கள் என்றால் ஜெயலலிதாவும், கருணாநிதியும் மட்டுமே, அவர்களின் வெற்றிடத்தை நிரப்பவே வருகிறேன்.   தமிழகத்திற்கு ஒரு தலைவன் தேவை, அந்த இடத்தை நிரப்ப நான் வருகிறேன்.ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கிறார் என்றார்.

மேலும் படிக்க