May 3, 2018
தண்டோரா குழு
தமிழகத்திற்கு இந்த மாதம் 4 டி.எம்.சி நீர் திறக்க கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைந்தது. இந்நிலையில் இது தொடா்பான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.இந்த விசாரணையின் போது மத்திய அரசு சார்பில், வரைவு திட்டம் தயாராகி விட்டது,ஆனால் பிரதமா் மோடி உள்பட மத்திய அமைச்சா்கள் அனைவரும் கா்நாடக தோ்தலில் பிரசாரத்தில் உள்ளனா்.
இதனால் வரைவு திட்டத்தை தாக்கல் செய்து ஒப்புதல் பெறமுடியவில்லை. எனவே வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வேண்டும் என்று கேட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்துக்கு காவிரியில் இருந்து 4 டி.எம்.சி. தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. மே மாதத்துக்குள் காவிரியில் 4 டி.எம்.சி. தண்ணீரை தர வேண்டும் என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.மேலும்,உத்தரவை செயல்படுத்தாவிட்டால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என கூறி வரும் 8 ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைத்துள்ளனர்.