• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தின் முதல் லுலு ஹைப்பர் மார்க்கெட் கோவையில் திறப்பு !

June 14, 2023 தண்டோரா குழு

கோவை லட்சுமி மில் வளாகத்தில் புதியதாக லுலு மால் இன்று திறக்கப்பட்டது. தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இந்த மாலினை திறந்து வைத்தார்.

ஐக்கிய அரபு எமிரேட்ஸை தலைமை இடமாக கொண்ட லுலு நிறுவனம் தமிழகத்தில் தனது வணிகத்தை கோவையில் முதன் முதலாக துவங்கியது.இந்தியாவில் திருவனந்தபுரம், கொச்சின்,பெங்களூரு மற்றும் லக்னோ ஆகிய நகரங்களில் லுலு மால் இருக்கின்றது. இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சுற்றுப்பயணம் சென்றிந்த போது ,லுலு நிறுவனம் தமிழகத்தில் ரூபாய் 3500 கோடி முதலீட்டை செய்வதற்க்கான ஒப்பந்தம் செய்தது.

அதன்படி தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமைக்க திட்டமிடப்பட்டது.இந்நிலையில் கோவையில் லூலூ ஹைப்பர் மார்க்கெட் அமைப்பதற்கான பணிகள் கடந்த ஆண்டு துவங்கி நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்த நிலையில் கோவை அவிநாசி சாலையில் லட்சுமி மில்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்ட லுலு மாலை தமிழக தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா இன்று திறந்துவைத்தார்.1.32 லட்சம் சதுர அடியில் மிக பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்த மாலில் இன்று பிற்பகல் முதல் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய லுலு நிறுவனத்தின் உரிமையாளர் யூசூப் அலி,

தமிழக அரசுடன் 3500 கோடி ரூபாய்க்கு போடப்பட்ட ஒப்பந்த்தின் அடிப்படையின் முதல் நடவடிக்கையாக இந்த ஹைப்பர் மார்க்கெட் துவக்கப்பட்டு உள்ளதாகவும்,இதில் எங்களுடைய சொந்த நிறுவன பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருப்பதாகவும்,இதன் மூலம் ஏராளமானோருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டு. உள்ளதாகவும் தெரிவித்தார்.இந்த மாலில் அனைத்து விதமான வீட்டு உபயோக பொருட்கள், உணவுகள், காய்கறிகள், என அனைத்து விதமான பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பொதுமக்கள் விநியோகப் பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க