June 15, 2018
தண்டோரா குழு
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும்,தமிழகத்தின் உள் மாவட்டங்களில் பலத்த காற்றுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும் திண்டுக்கல்,கோவை,நீலகிரி,தேனி திருநெல்வேலியை ஒட்டியுள்ள மலை கிராமங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.தென் கடலோர பகுதிகளில் அலைகளின் வேகம் 3.5 மீட்டா் முதல் 4.3 மீட்டா் வரை இருக்கும் என்பதால் மீனவா்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.