• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு சூர்யா அறிக்கை மூலம் பதிலடி !

July 20, 2019 தண்டோரா குழு

நடிகர் சூர்யா தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

அகரம் அறக்கட்டளையின் 40-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் சூர்யா, தேசியக் கல்விக் கொள்கையின் புதிய திட்டங்கள், 3 வயதிலேயே மும்மொழிக் கல்வியைத் திணிப்பதாகவும், ஆசிரியரே இல்லாமல் நீட் தேர்வு எழுதுவது எப்படி? என்றும் விமர்சித்தார். “30 கோடி மாணவர்களின் எதிர்காலம் தேசியக் கல்விக் கொள்கையில் உள்ளது. இதில் எதற்கு அவசரம்? பரிந்துரைகளை அளிக்க ஒரு மாத கால அவகாசம் மட்டும் அளித்தது ஏன்? ஏன் நாம் அத்தனை பேரும் வரைவு அறிக்கை குறித்து பேசவில்லை?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சூர்யாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை கிளப்பியது. சூர்யாவின் இந்தக் கருத்துக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதேசமயம், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன், நாஞ்சில் சம்பத் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நடிகர் சூரியா மீண்டும் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,

சமமான வாய்ப்பும், தரமான கல்வியும் மறுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மாணவர்களின் நிலை உணர்ந்த ஒரு குடிமகனாக, சக மனிதனாகவே என் கேள்விகளை முன் வைக்கிறேன்.

கல்வி என்பது ஒரு சமூக அறம். பணம் இருந்தால் விளையாடு என்று சொல்கிற சூதாட்டமாக அது மாறக்கூடாது. நம் நாட்டில் கல்வியானது ஏழைகளுக்கு ஒன்றாகவும், வசதி படைத்தவர்களுக்கு ஒன்றாகவும் இருக்கிறது என்பதை உணர புள்ளி விவரங்கள் தேவையில்லை. மனசாட்சியே போதுமானது.பெற்றோரை இழந்த மாணவி மருத்துவம் முடித்து ராணுவத்தில் பணியாற்றுகிறார். கல் உடைக்கிற தொழிலாளியின் மகன், சென்னை மருத்துவக்கல்லூரியில் மேற்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். ஆடு மேய்க்கிற பெற்றோரின் மகன், சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் ஆகி கிராமப்புறங்களில் பணியாற்றுகிறார்.

நீட் தேர்வு இருந்திருந்தால் இவர்கள் யாரும் மருத்துவர்கள் ஆகியிருக்க முடியாது அரசுப்பள்ளிகளில் படித்து மருத்துவர்களான மாணவர்கள் தரத்தில், தகுதியில் சிறந்தே விளங்குகின்றனர். நீட் அறிமுகமான பிறகு அகரம் மூலமாக அரசுப்பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக் கல்லூரியில் சேர்க்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.

மேலும் படிக்க