• Download mobile app
20 May 2025, TuesdayEdition - 3387
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர் அமைப்புகள் முன்வைத்து வருகிறார்கள் – எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா

October 3, 2018 தண்டோரா குழு

இரயில்வே தொழிலாளர்கள் தேர்தல் சமயங்களில் தன் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை எதிர் அமைப்புகள் முன்வைத்து வருவதாக சதர்ன் இரயில்வே மஸ்தூர் யூனியன் பொதுச்செயலாளர் கண்ணையா
குற்றம்சாட்டியுள்ளார்.

திருச்சி இரயில்வே மண்டல சொசைட்டி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை ஒட்டி அத்தேர்தலில் போட்டியிடும் சங்க உறுப்பினர்களுக்கு ஆதரவாக எஸ்.ஆர்.எம்.யூ சங்கத்தின் பொதுச்செயலாளர் கண்ணையா கோவையில் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

நாட்டில அதிக வேலைவாய்ப்புகளை வழங்க கூடிய துறையாக இரயில்வே துறை மட்டுமே விளங்கி வருகிறது. ஆனால் ஒரு கோடி வேலை வாய்ப்புகள் வழங்குவதாக உறுதியளித்த மத்திய அரசு விவேக் தேபராய் குழு பரிந்துரையின் அடிப்படையில் 4 லட்சத்து 75 ஆயிரம் இரயில்வே தொழிலாளர்களை வீட்டுக்கு அனுப்பும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. தென்னிந்தியாவில் பறிபோகும் 18 ஆயிரம் பணிகளை பாதுகாக்க எஸ்.ஆர்.எம்.யூ நாடு தழுவிய போராட்டங்களை நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறது என்றார்.

அப்போது, சொத்து குவிப்பு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு இரயில்வே அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், தாம் எந்த அரசு பணியிலும் இல்லாதவர் என்று குறிப்பிட்ட அவர் தம் மீது, இரயில்வே ஊழியர்களால் புறக்கணிக்கப்பட்ட எதிர் அமைப்புகள் காழ்ப்புணர்ச்சியோடு இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து வாக்குகளை பெற முயற்சிகிறது. மேலும் அந்த சொசைட்டியில் தாம் உறுப்பினர் அல்ல எனவும் 538 கோடி ரூபாய் மட்டுமே ஆண்டு வருமானம் கொண்ட அந்த அமைப்பில் 1500 கோடி ரூபாய் ஊழல் என குற்றம்சாட்டுவதாகவும் அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும் படிக்க