• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன் மீது காலணி வீசப்பட்டது குறித்து ஜடேஜா கருத்து !

April 11, 2018 தண்டோரா குழு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நேற்று சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.இந்த பரபரப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணியை சென்னை அணி வீழ்த்தியது.

இதற்கிடையில்,காவிரி விவகாரம் தொடர்பாக சென்னையில் ஐபிஎல் போட்டி நடத்த கூடாது என்று போட்டி துவங்குவதற்கு முன் பல்வேறு அமைப்புக்கள், திரைத்துறையினர்,அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணா சாலையில் மாபெரும் போராட்டங்கள் நடத்தினர்.பின்னர் அனைவரும் கைது செய்யப்பட்டு போட்டி துவங்கியது.ரசிகர்களுக்கும் கடும் கட்டுபாடு விதிக்கப்பட்டது.எனினும் போட்டி நடந்து கொண்டிருந்த போது மைதானத்தில் ரசிகர்கள் சிலர் காலணி,கொடிகள் வீசியதால் பதற்றம் நிலவியது.

இதில்,ரசிகர்கள் வீசிய காலணி சென்னை வீரர்கள் முரளி விஜய், ஜடேஜா, டூப்ளிசீஸ் அருகில் விழுந்தது.இதையடுத்து, உடனடியாக போலீசார் அவர்கைளை வெளியேற்றினர்.

இந்நிலையில், தன் மீது காலணி வீசிய ரசிகர்கள் குறித்து சென்னை அணி வீரர் ஜடேஜா காலணி வீசிய புகைபடத்துடன் கருத்து தெரிவித்துள்ளார்.அதில்,”காலணி வீசினால் சிஎஸ்கே ரசிகர்கள் மீதும் இன்னும் அன்பும் பாசமும் உள்ளது”எனக் கூறியுள்ளார்.

மேலும் படிக்க