April 17, 2018
தண்டோரா குழு
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்.நடிகை ஸ்ரீரெட்டி,அண்மையில் அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.இது மட்டுமின்றி தெலுங்கு நடிகர் சங்கத்தின் மீது அடுக்கடுக்கான புகார்களைக் கூறினார்.
இதற்கிடையில்,இது தொடர்பாக கருத்து தெரிவித்த நடிகர் பவன் கல்யாண், நடிகை ஸ்ரீரெட்டி நீதிமன்றத்தை நாட வேண்டும்.தொலைக்காட்சிகளால் செய்திகளை வழங்க முடியுமே தவிர,நீதி வழங்க முடியாது எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில்,இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி, பவன் கல்யாணை சகோதரராக கருதியதற்கு தன்னையே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டுமென கூறினார். உடனே செய்தியாளர்கள் முன்னிலை செருப்பால் அடித்துக்கொண்டு நடிகை ஸ்ரீரெட்டி பரபரப்பை ஏற்படுத்தினார்.