• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தன்னலமற்ற சேவை செய்யும் மருத்துவர் உதய்மோடி

April 24, 2017 தண்டோரா குழு

மும்பையில் ஆதரவற்ற 5௦௦ முதியவர்களுக்கு தினமும் உணவுகளை இலவசமாக வழங்கி வருகிறார் மருத்துவர் உதய் மோடி.

குஜராத் மாநிலத்திலுள்ள ராஜ்கோட் நகருக்கு அருகிலுள்ள அம்ரேலி கிராமத்தில் மருத்துவராக பணிபுரிந்து வந்த அவர் மும்பை நகரில் உள்ள மருத்துவமனைக்கு பணி மாறுதல் செய்யப்பட்டார்.அங்கு வந்த அவர், தங்களுடைய சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களுக்கு சேவை செய்வதற்காக தன்னுடைய முழு வாழ்கையை அர்ப்பணம் செய்துள்ளார். மும்பை நகரிலுள்ள பாயந்தர் என்னும் இடத்தில் தினமும் 5௦௦ மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கும் சேவையை செய்து வருகிறார்.

“ஒரு முறை 78 வயது முதியவர் என்னை பார்க்க வந்திருந்தார். அவருடைய மனைவி படுத்த படுக்கையாக இருப்பதாகவும், மும்பையில் 1௦ ரூபாய்க்கு விற்கபடும் உணவு வகையான ‘வடா பாவ்’ கூட வாங்க முடியவில்லை என்று வேதனையோடு கூறினார்.நான் அவர்களுடைய பிள்ளைகளை குறித்து விசாரித்தபோது, அவர்கள் தங்களை கைவிட்டுவிட்டனர் என்று கண்ணீரோடு கூறினார். அவருடைய வேதனையை குறித்து கேட்டபோது, என்னுள்ளம் உடைந்துவிட்டது.

தங்களுடைய சொந்த பிள்ளைகளால் கைவிடப்பட்ட மகளுக்கு சேவை செய்யவேண்டும் என்னும் எண்ணம் என் உள்ளத்தில் தோன்றியது. அந்த எண்ணத்தை தற்போது என்னுடைய செயல்களில் காட்டிக்கொண்டு வருகிறேன்” என்று உதய் மோடி தெரிவித்தார்.‘ஷ்ரவன்’ டிபன் சர்வீஸ் என்ற பெயரில் தன்னுடைய சேவையை உதய் மோடி தொடங்கினார். முதலில் உணவுகளை அவருடைய மனைவி தயார் செய்தார். பிறகு இரண்டு சமையல்காரர்களை உதவிக்கு வைத்துள்ளார்.இவரது தன்னலமற்ற சேவையை பாராட்டி பலர் தங்களால் ஆன உதவிகளை செய்து வருகின்றனர்.

மேலும் படிக்க