• Download mobile app
13 Sep 2025, SaturdayEdition - 3503
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனி ஆளாக பேருந்தை தடுத்த பெண்ணிற்கு ஸ்டாலின் பாராட்டு

April 6, 2018 தண்டோரா குழு

தனி ஒரு ஆளாக சாலை மறியலில் ஈடுபட்ட பெண்ணிற்கு திமுக செயல் தலைவர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நேற்று  திமுக மற்றும் தோழமை கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டது. அப்போது, வேலூர் மாவட்டத்தில் ஒற்றை ஆளாக ஓடும் பேருந்தை இயக்க கூடாது என்று கையில் திமுக கொடியுடன் பெண் ஒருவர் பேருந்தை தடுத்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது.பின்னர் அவர் திமுகவை சேர்ந்த தெய்வநாயகி என்பது தெரியவந்தது.

இந்நிலையில், மறியல் செய்த திமுக கழகத்தைச் சார்ந்த தெய்வநாயகியை இன்று நேரில் சந்தித்து ஸ்டாலின் தன் வாழ்த்துகளை தெரிவித்தார்.

மேலும் படிக்க