• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதால் பாதுகாப்பு கோரி ஆட்சியரிடம் மனு

April 5, 2022 தண்டோரா குழு

வாங்காத கடன் தொகைக்கு தவணை செலுத்தவில்லை எனக்கூறி தனியார் வங்கி ஊழியர்கள் மிரட்டல் விடுப்பதால் தகுந்த பாதுகாப்பு வேண்டும் எனக் கோரி சரவணன் என்பவர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

கோவை குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சரவணன் அவரது மனைவி தீபா அரிசி வியாபாரம் செய்து வரும் இவர் ரெப்கோ வங்கியின் மூலம் 2018 ஆம் ஆண்டு 6 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். அதன்பின் டாப்-அப் லோனுக்காக 2 லட்சம் கேட்டு அது ரெப்கோ வங்கியில் கிடைக்காததால் ஆதார் ஹவுசிங் பைனானன்ஸ் என்ற வங்கியை முகவர் மூலம் சரவணன் நாடியுள்ளார்.

இந்நிலையில், அவர் கேட்ட டாப் அப் லோனின் முழுத் தொகையையும் வழங்காமல் தொடர்ந்து வட்டியை மட்டும் கட்டி வர வங்கி ஊழியர்கள் கூறியதாகச் தெரிகிறது. தொடர்ந்து வட்டியை சரவணன் கட்டி வந்த நிலையில் தற்போது உங்களது சிபில் ஸ்கோர் குறைந்துவிட்டதால் கடனின் மீதி தொகையை கொடுக்க முடியாது என்று கூறிய ஆதார் ஹவுஸிங் ஃபைனான்ஸ், வங்கி சரவணனின் கடனை வாராக்கடனாக்கி அவரது வீட்டையும் ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் ஹவுசிங் லோன் கட்டாததால் இந்த வீடு அடமானத்தில் உள்ளது என்றும் சரவணனின் வீட்டுச் சுவரில் வங்கி ஊழியர்கள் எழுதியுள்ளனர்.இந்நிலையில் கடனை செலுத்தாவிட்டால் வீட்டை இடித்து விடுவதாகவும் வங்கி ஊழியர்கள் மிரட்டியதாக சரவணன் புகார் தெரிவித்துள்ளார்.இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டதாகவும்,தகுந்த பாதுகாப்பு வழங்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் சரவணன் மற்றும் தீபா தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க