• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் பள்ளிகள் வாகனங்களை ஆய்வு செய்த ஆட்சியர்

May 30, 2023 தண்டோரா குழு

கோவை காவலர் பயிற்சி மைதானத்தில் இன்று தனியார் பள்ளி பேருந்துகளை போக்குவரத்துத்துறை,பள்ளிக்கல்வித்துறை, காவல்துறை ஆகிய அரசுத் துறைகள் இணைந்து கூட்டாய்வு செய்யும் பணியினை ஆட்சியர் கிராந்தி குமார் பாடி நேரில் பார்வையிட்டார்

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது:

பள்ளி கல்வி நிறுவனங்களின் ஆண்டு விடுமுறை காலம் முடிந்து 2023-2024 ஆம் கல்வி ஆண்டு தொடங்குவதால் தமிழ்நாடு மோட்டார் வாகன சிறப்பு விதிகள் 2012-ன்படி கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி வாகனங்களில் பாதுகாப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடைபெற்று வருகிறது.

அதனடிப்படையில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களுக்கு உட்பட்ட 230 பள்ளிகளைச் சார்ந்த 1355 தனியார் பள்ளி வாகனங்கள் காவலர் பயிற்சி மைதானத்தில் கூட்டாய்வு நடத்தப்பட்டன. ஏற்கனவே கிராமபகுதிகளை சேர்ந்த பள்ளி வாகனங்களுக்கு மேட்டுப்பாளையம்,மற்றும் பொள்ளாச்சியிலும் கூட்டாய்வு நடைபெற்றுள்ளது.

ஆய்வில் பள்ளி பேருந்துகளின் வரன்முறை மற்றும் கட்டுப்பாடு குறிப்பிட்டவாறு 17 அம்சங்கள் கொண்ட விதிகள் உள்ளனவா என ஆய்வு செய்யப்பட்டன.மேலும் ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த அறிவுரை மற்றும் தொழிலாளர் நல வாரியத்தின் மூலமாக ஓட்டுநர்களுக்கான நல திட்டங்களை விரிவாக ஓட்டுநர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

கூட்டாய்வின்போது பள்ளி பேருந்து ஓட்டுநர்களுக்கான இலவச கண் பரிசோதனை முகாம், முதலுதவி குறித்த பயிற்சிகள், இலவச மருத்துவ பரிசோதனை ஆகியவை நடத்தப்பட்டன.வாகன ஓட்டுநர்கள் தங்களது வாகனங்கள் நல்ல நிலையில் உள்ளதா என்பதை பரிசோதித்து கொள்ள வேண்டும். ஏதாவது வாகனத்தில் பிரச்சனை என்றால் உடனடியாக பள்ளி நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டும். பிரச்சனையினை சரிசெய்த பிறகுதான் வாகனங்களை இயக்கவேண்டும்.

கோவை மாவட்ட சாலைகளில் அதிக வாகன போக்குவரத்து காரணமாக சில நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. அதுபோன்ற நேரங்களில் பள்ளிநிர்வாகம் வாகன ஓட்டுநர்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் சென்று வரவேண்டும் என்று கட்டாயப்படுத்த கூடாது.குழந்தைகளை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதுதான் உங்களுடைய பொறுப்பாக இருக்கவேண்டும். வாகன ஓட்டுநர்கள் அனைவரும் சாலைவிதிகளை முறையாக கடைபிடித்து வாகனத்தை இயக்க வேண்டும்.

இவ்வாறு கூறினார்.

மேலும் படிக்க