• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 26ம் தேதிக்கு மாற்றம்- ஆட்சியர் அறிவிப்பு

March 21, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் பயன் பெறும் வகையில் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்த வேலைவாய்ப்பு முகாம் நிர்வாக காரணங்களினால் வரும் 26ம் தேதி சனிக்கிழமை நடைபெறும் என ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளதாவது:

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறிவழிகாட்டும் மையம் மூலமாக தனியார் நிறுவனங்களில் பணிபுரிவதற்கான பெரிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருந்தது.

இம்முகாம் நிர்வாக காரணங்களினால் வரும் 26ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணியளவில் சூலுாரில் அமைந்துள்ள தனியார் (ஆர்.வி.எஸ்) கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இம்முகாமிற்கு வருகை புரியும் அனைத்து இளைஞர்களும் தங்களது சுயவிவரம் மற்றும் கல்விச்சான்றிதழ்களின் நகல்களுடன் கலந்துகொண்டு வேலைவாய்ப்பு பெறலாம். இம்முகாமில் கலந்துகொள்ள வயது வரம்பு இல்லை. இம்முகாமில் பல்வேறு துறைகளை சார்ந்த 170-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன.

10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணிக்காலியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.

இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க