November 17, 2017
தண்டோரா குழு
துபாயில் நடிகை ஹேமமாலினி தனது டிரீம் கேர்ள் என்ற ஆங்கில நூலை அறிமுகம் செய்தார்.
துபாய் ஷார்ஜாவில் நடந்த 36-வது சர்வதேச புத்தக கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக வந்த நடிகை ஹேமமாலினி இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, நடிகை ஹேமமாலினி தனது டிரீம் கேர்ள் என்ற ஆங்கில நூலை அறிமுகம் செய்தார்.
அப்போது பேசிய அவர்,
பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அவர்களது விருப்பம் போல் படிக்க வைக்க வேண்டும். தங்களது விருப்பத்துக்கு ஏற்ப பிள்ளைகளை படிக்க வைக்க கட்டாயமாக்க கூடாது. மதுரா தொகுதியில் பொதுமக்களுக்காக கழிவறைகளை கட்டிகொடுத்தேன். சில நாட்கள் கழித்து அவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா என ஆய்வு செய்தேன். ஆனால்,அந்த கழிவறைகள் பயன்படுத்தப்படாமல் பொருட்கள் வைக்கும் அறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து அதிர்ச்சி அடைந்தேன். இது குறித்து அந்த பகுதி மக்களிடம் விசாரித்த போது கழிவறைகளை பயன்படுத்தி காலைக்கடன்களை செய்ய மிகவும் சிரமமாக இருக்கிறது. இயற்கையாக காலைக் கடன்களை செலுத்தி பழக்கப்பட்ட எங்களுக்கு, இதனால் காலைக் கடனை செலுத்த கழிவறைகளில் முடியவில்லை என தெரிவித்தனர். இதை கேட்டு நான் மிகவும் அதிர்ச்சி அடைந்தேன் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் பாரதி காவலர் ராமமூர்த்தி, வர்த்தக பிரமுகர் சையது அபுதாஹிர், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.