March 15, 2018
தண்டோரா குழு
டிடிவி தினகரன் மதுரை மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது கட்சி பெயரை அறிவித்தார்.
ஆர்.கே. நகர் சட்டமன்ற உறுப்பினர் டிடிவி தினகரன் மதுரையில் தனது கட்சி பெயரை இன்று அறிவிப்பதாக கூறியிருந்தார். இதையடுத்து, மதுரை மேலூரில் இன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதைப்போல் தகுதி நீக்கம் செய்யப்பட்ட 18 எம்எல்ஏக்களும் பங்கேற்றனர்.
இதனைத்தொடர்ந்து பொதுக்கூட்டத்தில் “அம்மா மக்கள் முன்னேற்றக்கழகம்” என்று தனது கட்சி பெயரை அறிவித்தார் டிடிவி தினகரன்.கருப்பு,வெள்ளை, சிவப்பு நிற கொடியில் ஜெயலலிதா இருப்பது போன்ற கொடியை அறிமுகப்படுத்தினார்.
மேலும்,தமிழ்நாட்டில் திராவிடம் இல்லாத இன்னொரு அரசியல் கட்சி உதயமாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.