May 29, 2018
தண்டோரா குழு
தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 2012ல் ரஜினிகாந்த் பெயரைச்சொல்லி பைனான்சியர் போத்ராவிடம் இயக்குநர் கஸ்தூரிராஜா 65 லட்சம் கடன் பெற்றதாகவும் கடன் தொகையை காசோலையாக திருப்பிக் கொடுத்தபோது வங்கியில் பணம் இல்லை என்று திரும்பி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இயக்குனர் கஸ்தூரி ராஜாவுக்கு எதிரான பைனான்சியர் போத்ரா தொடர்ந்த செக் மோசடி வழக்கில், ரஜினிகாந்த் தாக்கல் செய்த பதில் மனுவில் தன் பெயரை தவறாக பயன்படுத்தி போத்ரா பணம் பறிக்க முயற்சிப்பதாக தெரிவித்திருந்தார்.
இதனால்,ரஜினிகாந்த் மீது ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் போத்ரா அவதூறு வழக்கு தொடர்ந்தார்.இதையடுத்து ரஜினிக்கு எதிராக போத்ரா ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். அதில் கஸ்தூரிராஜாவுக்கு எதிராகதான் வழக்கு தொடர்ந்ததாகவும், ரஜினிகாந்த் தனக்கு எதிராக தவறான தகவல்களை கூறுவதாகவும் போத்ரா தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, அவதூறு வழக்கில் வரும் ஜூன் 6ம் தேதி நேரில் ஆஜராகும்படி, நடிகர் ரஜினி காந்த்துக்கு சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தனக்கு எதிரான அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் ரஜினிகாந்த் மனு தாக்கல் செய்துள்ளார்.