• Download mobile app
07 Nov 2025, FridayEdition - 3558
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தையின் கல்லீரலை பாதி வெட்டி மகளுக்கு பொருத்தி உயிரை காப்பாற்றிய கேஜி மருத்துவமனை !

March 10, 2020

கோவை கேஜி மருத்துவமனையில் முதன்முறையாக நடந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.

சேலம் அருகே ஓமலூரை சேர்ந்த மின்வாரிய போர்மேனின் 2௦ வயது மகள் கல்லீரல் நோயினால் கேஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் . உடலில் காப்பர் சத்து குறைந்துவிட்டதால் கல்லீரல் கெட்டு விட்டது. பிறவியிலேயே இந்த கோளாறு இருந்துள்ளது. யாரவது கல்லீரல் தானம் செய்தால் இந்த பெண்ணை உயிர்பிழைக்க வைக்கலாம் என்று நிலை ஏற்பட்டது.
இப்பெண்ணின் தந்தை தனது கல்லீரலில் பாதியை வெட்டி தானமாக தர முன்வந்தார். கேஜி மருத்துவமனையில் இந்த கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. மனித உடலில் கல்லீரல் தானாக வளரும் தன்மை கொண்டது. அதனால் கல்லீரல் தானம் செய்த தந்தைக்கு எந்த பாதிப்புக் இல்லை. தற்போது தந்தை மகள் இருவரும் நலமாக உள்ளனர்.

இது குறித்து கேஜி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பக்தவத்சலம் கூறுகையில்,

தாய்பாசம் பெரிது என்பார்கள் உண்மை தான் ஆனால் இங்கு தந்தை பாசம் வென்றது. இந்த தந்தை மகளுக்கு மறுபிறவி கொடுத்துள்ளார். கேஜி மருத்துவமனையில் கிட்டத்தட்ட 18 மணி நேரம் இந்த ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. டாக்டர் நர்ஸ் என கிட்டத்தட்ட 38 ஊழியர் இதில் பணி புரிந்தனர். தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும் தந்தை அன்பின் முன்னே என்பது இங்கு நிரூப்பிக்கப்பட்டது. தாயின் கருவறையில் உதித்தாலும் பூமியின் ஸ்பரிசத்தை உணர்ந்த நாள் முதல் நம்மை நெஞ்சில் சுமக்கும் தந்தையின் அன்பை எவ்வளவு வர்ணித்தாலும் தகும். தொப்புள்கொடி பந்தம் பிரிக்க முடியாதது தான். ஆனால் தந்தையின் பாசம் வாழ்வோடு கலந்தது என்றார்.

மேலும் படிக்க