• Download mobile app
25 Mar 2026, WednesdayEdition - 3696
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தந்தைக்கு கல்லீரலை தானமாக வழங்கிய 19 வயது மகள்

November 19, 2019 தண்டோரா குழு

கல்லீரல் செயலிழந்த தந்தைக்கு 19 வயதான மகள் தனது கல்லீரலை தானமாக கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியை சேர்ந்த 48 வயதான தந்தை, கல்லீரல் செயல் இழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனால் மாற்று சிகிச்சைக்கு காத்திருந்தார். இதையடுத்து பொறியியல் மாணவியான இவருடைய மகள் தமது தந்தைக்கு கல்லீரலின் ஒரு பகுதியை தானமாக கொடுக்க முன் வந்தார்.

கல்லீரலை தானமாக கொடுத்த அந்தப் பெண் குணமடைந்த நிலையில் மருத்துவர்களுடன், சென்னையிலுள்ள தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

மேலும் படிக்க