• Download mobile app
10 Sep 2025, WednesdayEdition - 3500
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தநைரா எனும் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூம் கோவையில் துவக்கம் !

February 8, 2023 தண்டோரா குழு

டாட்டா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனத்தின் தநைரா எனும் பெண்களுக்கான பிரத்யேக ஷோரூம் கோவை சத்தி சாலையில் துவங்கப்பட்டது.

டாட்டா குழுமத்தை சேர்ந்த டைட்டன் நிறுவனம் தனது சேவையை விரிவுபடுத்தும் விதமாக கோவையில் 8 பிராண்டட் விற்பனை நிலையங்களை துவங்கியுள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு நல்ல ஷாப்பிங் அனுபவத்தை தரும் வகையில் நகைகள் கைக்கடிகாரங்கள் கண் பராமரிப்பு கண்ணாடிகள்,பாரம்பரிய உடைகள் உள்ளிட்ட பல்வேறு பிராண்டு விற்பனை நிலையங்களை தொடங்கியுள்ள இந்நிறுவனத்தின் ஒரு பகுதியாக கோவை சத்தி சாலையில் தனது பிராண்டான தநைரா ஷோரூம்,சுமார் ஏழாயிரம் சதுர அடியில்,நாட்டின் 37 வது ஸ்டோராக துவங்கப்பட்டது.

தநைரா வர்த்த பங்குதாரர் விஷ்ணுகுமார் முன்னிலையில் நடைபெற்ற துவக்க விழாவில், டைட்டன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சி.கே.வெங்கட்ராமன் ,தநைரா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி அம்புஜ் நாராயண், டைட்டன் நிறுவன சரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.

புதிய விற்பனை மையம் குறித்து தநைரா,மற்றும் டைட்டன் நிறுவன நிர்வாகிகள் கூறுகையில்,

புதிய விற்பனை மையத்தில் இயற்கையான மற்றும் தூய்மையான துணியால் செய்யப்பட்ட கைவினை புடவைகள் பிளவுஸ்கள் மற்றும் குர்தா செட்டுகள் இருப்பதாகவும் சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை வழங்கும் வகையில் மிகச்சிறந்த கட்டிடக்கலை உட்புறத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இந்த மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நெசவு அலகு பிரிவில், வாடிக்கையாளர்கள் அங்கேயே புதிதாக வெட்டப்பட்ட தறியை பெறலாம் என தெரிவித்தனர்.குறிப்பாக அனைத்து திருமண விழாக்களுக்கும் தேவையான பிரத்தியேக திருமண வகை சேலைகளுக்கென தனி பிரிவு மற்றும் ஷாப்பிங் செய்ய உடன் வரும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் ஓய்வு எடுக்கும் வகையில் தனி ஓய்வு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

குறிப்பாக திறப்பு விழா சலுகையாக இந்த மாதம் 8-ம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை குறிப்பிட்ட தொகைக்கு மேல் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்க நாணயம் பரிசாக வழங்க உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க