February 14, 2017
தண்டோரா குழு
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தடையை மீறி பட்டம் பறக்க விட்டுக்கொண்டு இருந்த 1௦௦ பேரை அந்நாட்டின் காவல் துறையினர் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14) கைது செய்தனர்.
பாகிஸ்தான் நாட்டில் பனிக்காலம் முடிந்து வசந்த காலம் தொடங்குவதின் அடையாளமாக பட்டம் பறக்கும் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். ஆனால், பட்டம் பறக்க வைக்க கண்ணாடித் தூள் பூசிய நூலைப் பயன்படுத்துவர். இதனால், ஒவ்வொரு ஆண்டும் பலருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. சிலர் உயிரிழந்துள்ளனர். இதனால், பட்டம் பறக்க விட அந்நாட்டின் உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
“பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணம் முழுவதிலும் பட்டம் பறக்க விட உச்ச நீதிமன்றம் தடைவித்தது. அதையும் மீறி பறக்கவிட்டால் அது மன்னிக்கமுடியாத குற்றமாகும்” என்றது.
பாகிஸ்தான் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பட்டம் விற்பனை செய்த மற்றும் பறக்கவிட்ட மொத்தம் 1௦7 பேரையும் கைது செய்துள்ளோம். பஞ்சாப் நகரில் பட்டம் பறக்க விடுவதற்குத் தடைவிதித்தும், பறக்கவிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்த போதிலும், சிலர் தொடர்ந்து பட்டம் தயாரிக்கிறார்கள். பலர் பட்டம் விடுகிறார்கள். குடிமக்களின் வாழ்க்கைக்கு ஆபத்து உண்டாக ஒருநாளும் அனுமதிக்கமாட்டோம்” என்றார்.