• Download mobile app
17 Sep 2025, WednesdayEdition - 3507
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடைசெய்யபட்ட நெகிழியை விற்பனை செய்த கடைகளுக்கு அபராதம் – கோவை மாநகராட்சி ஆணையர் அதிரடி

November 1, 2019 தண்டோரா குழு

கோவை பூமார்க்கெட்டில் தடைசெய்யபட்ட நெகிழியை விற்பனை செய்த கடைகளுக்கு கோவை மாநகராட்சி ஆணையர் அபராதம் விதித்தார்.

கோவையில் மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். தமிழக அரசு நெகிழிப்பைகளுக்கு தடைவிதித்துள்ளது. இந்நிலையில் தடைசெய்யப்பட்ட நெகிழிப்பைகளை வேறு வடிவில் தயாரித்து விற்பதாக கோவை மாநகராட்சி அலுவலகத்துக்கு புகார்கள் வந்தன. இதை தொடர்ந்து பூமார்கெட் பகுதியில் உள்ள கடைகளில் கோவை மாநகராட்சி ஆணையர் ஷ்ரவன்குமார் ஜடாவட் இன்று திடீரென ஆய்வு செய்தார். அப்போது தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்து வந்த கடைகளில் இருந்து பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து அபராதம் விதிக்க உத்தரவு பிறப்பித்தார். மூன்றுக்கு மேற்பட்ட கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழி இருந்ததால் விற்பனையாளருக்கு தல 10ஆயிரம் வரையில் அபராதம் விதித்தார். அதிகாரிகள் உடனடியாக அபராத தொகையும் வசூல் செய்தனர். இந்நிகழ்வு காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து விற்பனையளர்களிடம் தடைசெய்யப்பட்ட பொருட்களை விற்பதற்கான கொடுத்த கால அவகாசம் முடிந்து விட்டதாகவும், மீண்டும் இதுபோன்ற செயல்களில் ஈடுபடவேண்டாம் எனவும் மாநகராட்சி பகுதியில் தொடர்ந்து சோதனை நடக்கும் எனவும் குறிப்பிட்டார். அதேபோன்று சாலை ஆக்கரிமிப்பு உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுங்கள் என அதிகாரிகளிடம் அறிவுறுத்தினர்.

மேலும் படிக்க