• Download mobile app
09 Sep 2025, TuesdayEdition - 3499
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தடாகம் சாலையில் சாலை எது பள்ளம் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

May 11, 2023 தண்டோரா குழு

கோவை தடாகம் சாலையில் அரை மணி நேரம் மழைக்கே சாலைகள் வெள்ளக்காடாக மாறியதால் சாலை எது பள்ளம் எது என தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர்.

கோவை மாநகராட்சிக்குட்பட்ட தடாகம் சாலையில் வெங்கிட்டாபுரம் முதல் கே என் ஜி புதூர் வரை கடந்த ஆறு மாத காலத்திற்கும் மேலாக குடிநீர் குழாய் அமைக்கும் பணிகள் மற்றும் பிற பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு மீண்டும் மூடப்படாமல் இருந்து வருகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி பலமுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த போதும் அடுத்தடுத்து பணிகள் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சாலைகள் செப்பனிடப்படாததால் சேதம் அடைந்து கடுமையாக போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது.

தினம்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக சென்று வரும் நிலையில் சேதமான சாலைகளில் செல்ல முடியாமல் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் பெறும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனிடையே தற்போது கோடை மழை மாலை வேலைகளில் பெய்து வருவதால் ஏற்கனவே சேதமான சாலைகள் அடிக்கடி வெள்ளைக்காடாக மாறிவிடுகின்றன. சமீபத்தில் இப்பகுதியில் சாக்கடை அமைக்கும் பணி நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

இருப்பினும் பல இடங்களில் முழுமையாக இந்த பணிகள் நிறைவடையாததால் மழைக்காலங்களின்போது சாக்கடை நீர் வெளியேறி மழை நீருடன் கலந்து சாலையில் வெள்ளமாக ஓடுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. இந்த நிலையில் இன்று மாலை திடீரென சுமார் அரை மணி நேரம் மழை பெய்தது. இதன் காரணமாக இடையர்பாளையம் பகுதியில் மழை நீர் வெள்ளமாக ஓடியது. இந்த மழை நீருடன் சாக்கடை நீரும் கலந்து ஓடியதால் கடும் துர்நாற்றம் வீசியது. இதனிடையே குழந்தைகளை அழைத்து வந்த பெண்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் சாலை எது பள்ளம் எது என தெரியாத அளவிற்கு கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

சாலையில் ஆறு உருவாகிவிட்டதோ என அஞ்சும் அளவிற்கு மழை நீர் வெள்ளமாக ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். குறிப்பாக சாலையோரம் நடந்து செல்ல முடியாத நிலை இருப்பதால் பாதசாரிகள் சாக்கடை நீர் கலந்த மழை நீரில் முட்டி அளவு தண்ணீரில் சிரமத்துடன் கடந்து சென்றனர். இந்த சாலையை சீரமைக்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் தொடர்ந்து மழைக் காலங்களின் போது பெரும் இன்னலுக்கு ஆளாவதாக இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

சாலை பணிகளை விரைவாக முடித்து புதிய சாலை அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் படிக்க