February 23, 2021
தண்டோரா குழு
கோவையில் இராமயண காலத்தில் தொடர்புடைய கோவில் எனும் சிறப்பு பெற்ற பெரிய தடாகம் அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா வரும் 25 ஆம் தேதி வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
கோவையில் பெரிய தடாகம் பகுதியில், நீர்வளமும் மலைவளமும் நிலவளமும் பெற்று முருகனுக்கு மிகப் பொருத்தமான, அமைய பெற்றுள்ள அனுவாவி சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் ராமாயண காலத்தில் தொடர்புடையை தலமாக விளங்குகிறது.
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்களுக்கு அருள் புரிவதிலும், திருமணத் தடை உள்ளவர்கள் சுவாமிக்கு தாலி, வஸ்திரம் காணிக்கை செலுத்தி கல்யாண உற்சவம் நடத்தி திருமண தடை அகலுவதிலும், சிறப்பு வாய்ந்த இக்கோவிலின் மகா கும்பாபிஷேக விழா வரும் 25 ம்தேதி வியாழன் கிழமை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.
விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் விழா குறித்து,கோவில் நிர்வாகிகள், ஊர்ப்பொதுமக்கள் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.இதில் 24 வீரபாண்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிசாமி ஒன்றிய கவுன்சிலர் சம்பத்குமார் கிருத்திகை குழு தலைவர் பழனிசாமி விழா ஒருங்கிணைப்பாளர் அருண் பிரசாத் மற்றும் சுப்பையன் ,பெரிய தடாகம் அங்கண்ண கவுடர், அகஸ்டர் ஆஸ்ரம குமார சுவாமிகள் முன்னாள் கவுன்சிலர் ஆனந்த் டி கே டி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.
விழாவின் சிறப்பு அம்சமாக ,ஆலயத்தில் 14 அடி உயர கட்டி மரம் பிரதிஷ்டை செய்ய உள்ளதாகவும், முழுவதும் செம்பு கவசத்தில் உருவாக்கிய கொடி மரம் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுவதாக கூறிய விழா குழுவினர், விழாவையொட்டி யாக சாலையில் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கி கணபதி ஹோமம் தன பூஜை முதல் கால வழிபாடு துவங்கி, தீபாராதனை, பூர்ணாகுதி, என கும்பாபிஷேக விழாவிற்கான அனைத்து சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டு,திருக்குட நனரனீராட்டு விழா நடைபெற உள்ளதாக தெரிவித்தனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை வள்ளியம்மன் டிரஸ்ட், பெஸ்ட் குழுமம், நல்லறம் அறக்கட்டளை, உறவுகள் அறக்கட்டளை உட்பட தன்னார்வ அமைப்புகள் பலர் இணைந்து செய்துள்ளனர்.