July 2, 2018
தண்டோரா குழு
தங்க நகைத் தொழிலாளர்களின் தொழிலை மேம்படுத்த நூறு சதவீதம் இந்த அரசு துணை நிற்கும்,என தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.
கோவையில்,20 ஆயிரம் நகைப்பட்டறைகளில் 80 ஆயிரம் தொழிலாளர்கள் பணி செய்கின்றனர். இந்நிலையில் தங்க நகைத் தொழிலாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பான,`பொற்கொல்லர் பொது பயன்பாட்டு மையம்` அமைப்பதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.இதன் ஒரு பகுதியாக கோவை பெரிய கடை வீதியில் இந்த மையத்தின் கிளஸ்டர் அலுவலக திறப்பு விழா நடைபெற்றது.
அப்போது பேசிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி,
“தமிழக முன்னாள் முதல்வர் புரட்சி தலைவர் காலத்திலிருந்து தங்க நகை தொழிலாளர்கள் நலனை அ.தி.மு.க அரசு செய்து வருவதாக குறிப்பிட்ட அவர்,தங்க நகை தொழிலாளர்களின் தொழில் மேம்பட தேவையான உதவிகளை 100 சதவீதம் இந்த அரசு செய்ய தயாராக உள்ளதாக கூறினார்”.