• Download mobile app
18 May 2025, SundayEdition - 3385
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்க தமிழ்ச்செல்வன் உண்மையே சொல்லாததால் அவருடைய கேள்விக்கு பதிலை தவிர்க்கிறேன் – ஓ.பன்னீர்செல்வம்

July 19, 2018 தண்டோரா குழு

கடைமடை பகுதியான நாகப்பட்டிணத்தில் தூர்வாரும் பணி மும்மரமாக நடைபெற்று வருவதாகவும், 4-5 நாட்களில் அந்த பணிகள் முடிந்து விடுவதால்,மேட்டூர் அணையில் திறந்து விடப்பட்ட காவிரி நீர் நாகப்பட்டினத்திற்கு வர ஒரு வார காலமாகும் என்பதால் விவசாயிகளுக்கு தங்குதடையின்றி நீர் கிடைக்கும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“வரி ஏய்ப்பு இருப்பதனால் தான் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவதாகவும், அனைத்து கட்சியிலும் எந்த ஆட்சி வந்தாலும் ஒப்பந்ததாரர்கள் பணி செய்து வருவதாகவும், குறிப்பிட்ட கட்சியை சொல்வது தவறு என்றார்.தங்க தமிழ்ச்செல்வன் முதலில் தங்களின்
முதுகு பின்னால் உள்ள அழுக்கை பார்க்க வேண்டும் என்றும்,அவர் உண்மையே சொல்லாததால் அவருடைய கேள்விக்கு பதிலை தவிர்த்தே வருவதாகவும்,நாடாளுமன்றத்தில் மத்திய அரசிற்கு எதிரான தீர்மானம் தொடர்பாக தலைமை கழகம் கூடி முதல்வர் சென்னை வந்தபின் நல்ல முடிவை அறிவிப்போம்” என்றார்.

மேலும் படிக்க