• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவிற்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசுத்தொகை அறிவிப்பு

April 27, 2019 தண்டோரா குழு

ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்துவிற்கு திமுக மற்றும் காங்கிரஸ் கட்சி சார்பில் பரிசுத் தொகை அறிவிக்கபட்டுள்ளது.

கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் இந்தியாவிற்காக ஓடிய தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து முதலாவதாக வந்து தங்கப் பதக்கம் வென்றார். திருச்சி அருகே உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த மிகவும் ஏழை குடும்பத்தில் பிறந்தவர் கோமதி. பொருளாதாரம் மற்றும் அடிப்படை வசதிகள் சரிவரை கிடைக்காத மிகவும் பின்தங்கிய நிலையிலிருந்து வந்து தங்கப் பதக்கம் வென்ற கோமதிக்கு பல்வேறு தரப்பினரும், பெரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுதவிர சமூக வலைத்தளங்களிலும் கோமதி மாரிமுத்துக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

அவருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். முதல் நபராக நடிகர் ரோபோ சங்கர், வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசுத் தொகையை வழங்கினார். தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து நேற்று பகல் 1 மணிக்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் ஒரு கிராமத்தை சேர்ந்த நான், ஆசிய போட்டியில் தங்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்தது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பெங்களூருவில் வருமான வரித்துறையில் வேலை செய்து வருகிறேன். தமிழ்நாட்டில் வேலைக்காக முயற்சித்தும் கிடைக்கவில்லை. அதனால் தான் கர்நாடகாவில் வேலை செய்கிறேன். புதிய விளையாட்டு வீரர் வீராங்கனைகளை மத்திய, மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
ந்நிலையில் தங்கப் பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு திமுக மற்றும் காங்கிரஸ் சார்பில் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார். மென்மேலும் அவர்களது சாதனைகள் தொடர வாழ்த்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.அத்துடன், வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜுவுக்கு திமுக சார்பில் 5 லட்சம் பரிசாக வழங்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

மேலும்,கோமதி மாரிமுத்துக்கு தமிழக காங்கிரஸ் அறக்கட்டளை சார்பில் ரூ. 5 லட்சம் வழங்கப்படும் என கே.எல்.அழகிரி தெரிவித்துள்ளார். தோஹாவில் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றதற்கு காங்கிரஸ் கட்சி சார்பில் வாழ்த்தும் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க