• Download mobile app
29 Apr 2024, MondayEdition - 3001
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தங்கமகன் மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிப்பு

January 25, 2017 தண்டோரா குழு

பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகேயுள்ள பெரிய வடகம்பட்டியைச் சேர்ந்த டி.மாரியப்பன் (21), பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில்
1.89 மீ தாண்டி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

தங்கவேல்-சரோஜா தம்பதியின் மகனான மாரியப்பன், சிறுவயதில் ஏற்பட்ட விபத்தினால் வலது கால் பாதத்தை முழுமையாக இழந்து மாற்றுத் திறனாளியானார். தற்போது, சேலம் ஏவிஎஸ் கல்லூரியில் இளங்கலை நிர்வாகவியல் (பி.பி.ஏ) இறுதியாண்டு பயின்று வருகிறார். மாரியப்பனின் பாராலிம்பிக் சாதனையைப் பாராட்டி, தமிழக அரசு ரூ.2 கோடி ஊக்கத்தொகை வழங்கியது.

இந்நிலையில், பாராலிம்பிக்கில் தங்கம் வென்ற மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது வழங்கபடவுள்ளது என்ற தகவல் கிடைத்ததும், அவருடைய சொந்த ஊரான பெரிய வடகம்பட்டி கிராமத்தில் மக்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

மேலும், ஒலிம்பிக் போட்டிகளில் ஜிம்னாஸ்டிக் பிரிவில் 4-வது இடம் பிடித்த தீபா கர்மாக்கருக்கும் “பத்ம ஸ்ரீ” விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாரியப்பன் தங்கவேலு, தீபா கர்மாக்கர் உள்ளிட்ட மொத்தம் 20 பேருக்கு பத்ம ஸ்ரீ” விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க