• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தக்காளி வைரஸ் எதிரொலி கேரளாவில் இருந்து உக்கடம் வரும் பேருந்துகள் வாட்டர் வாஸ்

May 11, 2022 தண்டோரா குழு

கேரளாவில் தக்காளி வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது.5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை இந்த வைரஸ் அதிக அளவில் தாக்குகிறது. தமிழகத்தில் கேரளா மாநில எல்லை பகுதிகளில் கடும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து திருச்சூர், பாலக்காடு, வாளையார் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு 20க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் சிறு வியாபாரிகள், பொதுமக்கள், குழந்தைகள் என பல்வேறு தரப்பினரும் பயனம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இதனிடையே கேரளாவில் இருந்து உக்கடம் வரும் பேருந்துகள் வாட்டர் வாஸ் செய்து சுத்தம் செய்யப்படுகின்றன.

இதுகுறித்து கோவை அரசு போக்குவரத்து கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘பேருந்துகள் முழுவதுமாக தினமும் வாட்டர் வாஸ் செய்யப்படுகிறது. மேலும் பேருந்துகளின் உள் பகுதியில் மக்கள் அதிகம் தொடும் இடங்களில் கிருமி நாசினி கொண்டும் சுத்தப்படுத்தப்படுகிறது,’’ என்றார்.

மேலும் படிக்க