• Download mobile app
04 Nov 2025, TuesdayEdition - 3555
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தக்காளி காய்ச்சல் சம்பந்தமாக யாரும் பதட்டமடைய வேண்டாம் – ராதாகிருஷ்ணன்

May 14, 2022 தண்டோரா குழு

கோவை அரசு மருத்துவமனையில் ஆய்வு கூட்டம் நடத்திய பின் சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

சுகாதார துறை மேம்பட பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார். கோவையில் கூடுதலாக ஐ.சி.யு வசதிகளின் கூடிய கட்டிட பணிகளில் நடைபெற்று வருகிறது.தடுப்பூசி போடப்பட்டதால் கொரோனா அலை மிகவும் குறைந்தது. கொரோனாவிலிருந்து தங்களை தற்காத்து கொள்ள இன்னும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.

தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி போட வேண்டும் ஷவர்மா மற்றும் இறைச்சி உண்ண கூடிய ஹோட்டல்களில் தரமில்லாத, கெட்டுபோன மாமிசங்கள் பயன்படுத்தப்படுகிறதா என்று அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார்கள். தக்காளி காய்ச்சல் சம்பந்தமாக யாரும் பதட்டமடைய வேண்டாம்.வதந்திங்களை யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

மேலும் படிக்க