January 20, 2018
தண்டோரா குழு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எந்தவொரு ஜனாதிபதியையும் விட மிகவும் பிரபலமடையவில்லை என்று பல்வேறு கருத்துக் கணிப்புக்கள் முடிவில் தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு நடைப்பெற்ற குடியரசு தலைவர் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக டொனால்ட் டிரம்பும்,அமெரிக்க ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஹில்லாரி கிளின்டனும் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்று அமெரிக்க நாட்டின் 45வது குடியரசு தலைவராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்றார்.
இந்நிலையில், டிரம்ப் பதவியேற்று ஓர் ஆண்டு முடிவடைந்த நிலையில் NBC நியூஸ் மற்றும் Wall Street Journal பத்திரிக்கை நிறுவனம், டிரம்ப்பின் செயல்திறன் குறித்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டது.அந்த கருத்துக்கணிப்பின் முடிவு நேற்று (ஜன 19)வெளியானது.அதன் முடிவில் சுமார் 39 சதவீத அமெரிக்க மக்கள் மட்டுமே அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இதற்கு முன்னர் அமெரிக்க நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர்களாக இருந்த ஜார்ஜ் புஷ் 82 சதவீதமும், பில் கிளிண்டன் 60 சதவீதமும் மற்றும் பராக் ஒபாமா 50 சதவீத வாக்குகளை, தங்கள் முதல் ஆண்டு நிறைவில் பெற்று இருந்தனர். ஆனால், டொனால்ட் டிரம்ப் அவர்களை விட மிக குறைந்த வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.