• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டேட்டிங் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் திருடியவர்கள் கைது

February 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் துடியலூர் மற்றும் தடாகம் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக மொபைல் போன் மற்றும் இருசக்கர வாகனங்கள் காணாமல் போன வழக்குகளை விரைந்து கண்டு பிடிக்க மாவட்ட போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவின்பேரில், தனிப்படை அமைத்து விசாரித்து வந்த நிலையில் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த லோகேஷ் காட்வின் (19), அஸ்வின் (19), சுரேஷ் (33), பிரபாகரன் (24) மற்றும் விக்கி என்கிற விக்னேஷ் (23) ஆகியோர்கள் சேர்ந்து Grindr App என்கிற டேட்டிங் செயலியை பயன்படுத்தி நூதன முறையில் திருடியது தெரியவந்தது. இதனை அடுத்து அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் அவர்கள் பயன்படுத்திய செயலியில் ஓரினச்சேர்க்கையில் விருப்பமுள்ளவரின் புகைப்படம் , இருப்பிடம் மற்றும் அவர்களின் முழு விபரமும் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த விபரங்களை பயன்படுத்தி அவர்களிடம் நட்பாக இணையதள வாயிலாக பேசி, ஆசை வார்த்தைகளை கூறி அவர்களை நேரில் வரவழைத்து இருட்டான பகுதிக்கு அழைத்துச் சென்று அவர்களை அடித்து மிரட்டி பின்பு அவர்களிடமிருக்கும் விலைமதிப்புமிக்க போன், இருசக்கர வாகனம், நகை மற்றும் பணத்தை பறித்துக் கொண்டு அனுப்பியுள்ளார்கள் என்பது காவல்துறையினர் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1 மொபைல் போன், இரண்டு பவுன் தங்கச் செயின் மற்றும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து பறித்துச் சென்ற ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போலீஸ் எஸ்பி செல்வநாகரத்தினம் கூறுகையில்,

‘‘இது போன்ற செயலியை பயன்படுத்தி நூதன முறையில் வழிப்பறி செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என்றார்.

மேலும் படிக்க