March 3, 2020
தண்டோரா குழு
தமிழ்நாடு மாநில அளவில் நடந்த32 வது சப் – ஜூனியர், கேடட், ஜூனியர் மற்றும் சீனியர் டேக்வாண்டோ கியேருகி சாம்பியன்ஷிப் 2020(ஆண்/பெண்) போட்டி கடந்தவாரம், ராணிபேட்டை, அரக்கோணம் அம்பாரி வித்யாமந்திர் சிபிஎஸ்இ பள்ளியில் நடந்தது. தமிழ்நாடு டேக்வாண்டோ சங்கம் ஏற்பாடு செய்திருந்தது.
கோவை மாவட்டத்தில் டேக்வாண்டோ சங்கத்தின் சார்பில் பங்கேற்க 20 மாணவர்களும், 15 மாணவிகளும் இந்த சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் இணை செயலாளர் மற்றும் பயிற்சியாளர் மனோஜ் இந்த அணிக்கு தலைமை ஏற்றுச் சென்றார்.
போட்டியின் பதக்கம் வென்றவர்கள்:
68 கிலோ பிரிவில், பி.எஸ்ஜி பாலிடெக்னிக் கல்லுாரியின் ஏ.அஜய் தங்கப்பதக்கமும், 63 கிலோ எடை பிரிவில், பிஎஸ்ஜி கலை அறிவியில் கல்லுாரியை சேர்ந்த எம்.முகமது சாருக்கான், 87 கிலோ மற்றும் அதற்கு மேற்பட்ட பிரிவில், பிஎஸ்ஜி கலைஅறிவியல் கல்லுாரியை சேர்ந்த ஏ.எஸ் விஷ்ணுவர்தன், வெள்ளி பதக்கத்தையும் வென்றனர். 74 கிலோ பிரிவில், ஸ்ரீகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரியின் ஏ.எஸ் சாய் கணேஷ் வெண்கல பதக்கத்தையும், 58 கிலோ பிரிவில் டிப்ஸ் ஆர்கிடெக் கல்லுாிரியன் எஸ்.ஸ்ரீதரன் வெண்கல பதக்கத்தையும், , பிஎஸ்ஜி கலைஅறிவியல் கல்லுாரியை சேர்ந்த சந்திரபாபு வெண்கல பதக்கத்தையும் வென்றனர். 41 கிலோ எடை பிரிவில் , பிஎஸ்ஜி கலைஅறிவியல் கல்லுாரியை சேர்ந்த எஸ்.வைஸ்யா., வெள்ளி பதக்கத்தையும் வென்றார்.
சிறுவர் ஜூனியர் பிரிவில், 45 கிலோ பிரிவில் லிசிக்ஸ் உயர்நிலை பள்ளியை சேர்ந்த எஸ்.ஏ.ஆதிஷ் தங்க பதக்கத்தையும், 41 கிலோ பிரிவில் பாரதிய வித்யா பவன் பரணீதரன் வெள்ளி பதக்கமும் வென்றார்.
கோவை மாவட்ட டேக் வாண்டோ தலைமை பயிற்சியாளர் மற்றும் பொது செயலாளர் பிரேம்குமார், அனைவரையும பாராட்டினார். சாய்பாபா காலனியில் உள்ள மகுடம் மஹாலில் நடந்த பாராட்டு விழாவில் டிராபி மற்றும் சான்றிதழ்கள், பதக்கங்களை வழங்கினார்.
சங்கத்தின் இணை செயலாளர் மனோஜ், குங்பூ சங்கத்தின் பாலசுப்ரமணி, கராத்தே சங்கத்தின் மதன்பிரபு ஆகியோர் பதக்கம் பெற்றவர்களை வெகுவாக பாராட்டினர்.