• Download mobile app
05 May 2026, TuesdayEdition - 3737
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டெஸ்ட் வெற்றியை கேரள மக்களுக்கு அர்ப்பணித்த விராட் கோலிக்கு பினராயி விஜயன் பாராட்டு

August 23, 2018 தண்டோரா குழு

டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்ட் வெற்றியை கேரள வெள்ளத்தில் பாதித்தவர்களுக்கு அர்ப்பணித்த இந்திய அணி கேப்டனுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகளில் வென்றது. இதையடுத்து, ,நாட்டிங்ஹாமில் நடந்த 3-வது டெஸ்ட் போட்டியில்இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்போது இந்த வெற்றியை இந்திய அணி கேரள மக்களுக்கு சமர்ப்பிப்பதாக கேப்டன் விராட் கோலி அறிவித்தார். இதற்காக விராட் கோலிக்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

‘‘கேரள மாநில மக்களுக்கு கிரிக்கெட் வெற்றியை சமர்ப்பித்ததற்கு நன்றி. இந்திய அணியின் வெற்றிக்கு எங்களது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்’’ என்றுபதிவிட்டுள்ளார்.

மேலும் படிக்க