December 14, 2020
தண்டோரா குழு
டெல்லி போராட்டத்திற்கு ஆதரவாக
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அதில் கலந்து கொண்ட 100க்கும் மேற்பட்ட விவசாயிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் விவசாயிகள் 19 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.விவசாயிகளுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்பினர், கட்சியினர் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பினர் இன்று காலை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வேளாண்ம சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். போராட்டத்தில் இறந்த விவசாயிகளின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பப்பட்டன. இந்த போராட்டத்தில் இக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சு.பழனிசாமி, நிர்வாகிகள் வி.ஆர் பழனிசாமி, திருஞானசம்பந்தம், பெரியசாமி, சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.