July 4, 2018
தண்டோரா குழு
டெல்லியில் ஆளுநர் அதிகாரம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பு ஜனநாயகத்திற்கும்,இந்த நாட்டிற்கும் என்ன தேவையோ அதன் அடிப்படையிலேயே தீர்ப்பு வழங்கியுள்ளதாக மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை வரவேற்றுள்ளார்.
இதுகுறித்து கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
“தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு தான் அதிகாரம் உள்ளதாகவும்,பேரறிஞர் அண்ணா ஆளுநர் பதவி தேவையா என்று கேட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.ஆளுநருக்கு உட்பட்ட அதிகார வரம்பிற்குள் செயல்பட்டால் பிரச்னை இல்லை என்றும்,ஆய்வை பற்றி குறை ஏதும் சொல்லவில்லை என்றார்”.இவ்வாறு பேசினார்.