February 14, 2020
தமிழகத்தில் அரசு பேருந்துகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் துணை முதல்வர் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தமிழக பட்ஜெட்டை இன்று காலை தாக்கல் செய்தார் .10வது முறையாக துணை முதல்வர் பன்னீர்செல்வம் பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் அரசு பேருந்துகளில் 75.02 கோடி செலவில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று தமிழக அதிமுக அரசு அறிவித்துள்ளது. தனியார் பேருந்துகளிலும் இது கட்டாயமாக்கப்பட உள்ளது.
டெல்லியில் இந்த திட்டம் 2017ல் அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2018ல் இது நடைமுறைப்படுத்தப்பட்டது. டெல்லியில் கிட்டத்தட்ட 90% பேருந்துகளில் கேமரா இருக்கிறது. அங்கு தனியார் பேருந்திலும் கேமரா வைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்காக அங்கு 60 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது அங்கு கேமராக்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.