January 28, 2021
தண்டோரா குழு
குடியரசு தினவிழாவின் போது டெல்லியில் விவசாயிகள் நடத்திய பேரணியில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்த சம்பவத்தை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கோவை பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எச்.எம்.எஸ். தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜாமணி தலைமை தாங்கினார். இதில் ஐ.என்.டி.யு.சி. துளசிதாஸ், ஏ.ஐ.டி.யு.சி. ஆறுமுகம், சி.ஐ.டி.யு. கிருஷ்ணமூர்த்தி, வேலுச்சாமி, எல்.பி.எப். தியாகராஜன், ஏ.ஐ.சி.சி.டி.யு. தாமோதரன், எஸ்.டி.டி.யு.ரகுபுநிசார் உள்பட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும், புதிய வேளாண் சட்ட மசோதாக்களை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.