February 5, 2021
தண்டோரா குழு
தலைநகர் டெல்லியில் புதியதாக நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி கடந்த 70 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த போராட்டத்தில் குளிர் காரணமாக, உடல் நிலை சரியில்லாத காரணமாக, விபத்து காரணமாக என சுமார் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர்.
இந்த விவசாயிகளுக்கு அதரவு தெரிவிக்கும் விதமாகவும், போராடிய விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும் அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக கோவையில் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
பின்னர் ஒருங்கிணைப்பு குழு தலைவர் சு.பழனிசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்,
மத்திய அரசின் புதிய மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். இதை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெற வேண்டும்” என்றார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.