March 28, 2017
தண்டோரா குழு
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர்.
தமிழகத்திற்கு வறட்சி நிவாரணம் வேண்டும். காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். விவசாயிகள் கடன்கள் தள்ளுபடி செய்யவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் தலைநகர் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக போராடி வருகின்றனர்.
இந்நிலையில், தமாகா தலைவர் ஜி.கே.வாசனுடன் போராட்டம் நடத்தி வரும் தமிழக விவசாயிகள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியை சந்தித்தனர். தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் 15 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடன் தள்ளுபடி மற்றும் வறட்சி நிவாரணம் உள்ளிட்ட கோரிக்கை மனுவை அளித்தனர்.
மேலும், விவசாயிகள் காலையில் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லியை சந்தித்தனர்.