• Download mobile app
16 Jul 2026, ThursdayEdition - 3809
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டென்னிஸ் போட்டியில் விளையாடிய கர்ப்பிணி பெண் வீராங்கனை

July 5, 2017 தண்டோரா குழு

லக்சம்பேர்க் நாட்டு வீராங்கனை நாலரை மாதம் கர்ப்பத்துடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொண்டு ரசிகர்களின் பாராட்டை பெற்றுள்ளார்.

லக்சம்பேர்க் நாட்டை சேர்ந்த மாண்டி மினெல்லா. 31 வயதான இவர் நாலரை மாதம் கர்ப்பத்துடன் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் கலந்துக்கொண்டு, இத்தாலி நாட்டின் வீராங்கனை பிரான்செஸ்கா ஸ்கியாவோனேவை எதிர்த்து விளையாடினார். ஆனால் 6-1 6-1 என்னும் செட் கணக்கில் தோல்வி அடைந்தார்.

உலகின் 82-வது இடத்திலிருக்கும் அவர், அவருடைய கணவரும் பயிற்சியாளருமான டிம் சொம்மர் அவருடைய வயிற்றில் முத்தமிடுவதுபோல் இருக்கும் புகைப்படத்தை தனது பேஸ்புகில் செவ்வாய்க்கிழமை பதிவிட்டிருந்தார்.

மேலும் “இவ்வாண்டிற்கான விம்பிள்டன் போட்டி தான் என்னுடைய கடைசி விளையாட்டு” என்றும் தெரிவித்துள்ளார்.

உலக சாம்பியன் செரீனா வில்லியம்ஸ் தனது முதல் குழந்தை செப்டம்பர் மாதம் பிறக்க இருப்பதால், அவர் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டியில் கலந்துக்கொள்ளவில்லை.

முன்னால் உலக நம்பர் 1 சாம்பியனாக இருந்த அசரென்கா, கடந்த டிசம்பர் மாதம் அவருடைய மகன் லியோ பிறந்த பின்னர், டென்னிஸ் போட்டியில் மீண்டும் கலந்துக்கொள்ள தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க