April 12, 2018
தண்டோரா குழு
ராணுவ கண்காட்சியில் பங்கேற்க தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடியை #GoBackModi ஹாஷ்டேக் மூலம் திரும்பிப்போ என்று பதிவுகளை இட்டுவருகின்றனர்.தற்போது இந்த ஹாஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாகியுள்ளது.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.இதற்கிடையில் கடும் எதிர்ப்புக்களுக்கு இடையே சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு பல்வேறு தரப்பிலும் கண்டங்கள் எழுந்துள்ளது. இதையெடுத்து,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத பிரதமர் மோடியே திரும்பி போ என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், GoBackModi ஹாஷ்டேக் உலக அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்ததுள்ளது. பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து GoBackModi ஹாஷ்டெக் பகிரப்பட்டு வருகிறது.