January 23, 2026
தண்டோரா குழு
இரு மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் உலகளாவிய முன்னணி உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தமிழ்நாட்டின் கோவையில் தனது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ‘விஜய் டிவிஎஸ்’ -ஐத் தொடங்குவதாக அறிவித்துள்ளது.
இந்த புதிய டீலர்ஷிப் இப்பகுதியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் விற்பனை செயல்பாடுகளை மேலும் வலுப்படுத்தும். மேலும், வாடிக்கையாளர்களுக்கான சேவை மற்றும் வாகன உரிமையாளர் அனுபவத்தை மேம்படுத்துவதில் இந்நிறுவனம் தொடர்ந்து காட்டிவரும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
விஜய் டிவிஎஸ் வாடிக்கையாளர்களுக்கு புதிய வாகனத்தை வாங்குவது முதல் அதன் உரிமையாளராகத் தொடரும் பயணம் வரை, அனைத்துவிதமான சேவைகளை எளிதில் பெற உதவும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.விஜய் டிவிஎஸ்-ல் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பயணிகளுக்கான மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர கார்கோ வணிக வாகனங்கள் உள்ளிட்ட போக்குவரத்து தீர்வுகளை அளிக்கும் அனைத்து வகையான வாகனங்களும் கிடைக்கப்பெறும்.
இந்த டீலர்ஷிப்பின் தொடக்க விழாவில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் கமர்ஷியல் மொபிலிட்டி பிசினஸ் பிரிவுத் தலைவர் ரஜத் குப்தா மற்றும் விஜய் டிவிஎஸ் நிறுவனத்தின் டீலர் பார்ட்னர் சஞ்சய் ஆகியோர் கலந்து கொண்டனர். இது இப்பகுதியில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் வெற்றிகரமான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் இருக்குமென எதிர்பார்க்கப்படுகிறது. ’விஜய் டிவிஎஸ்’ தொடக்கத்தின் மூலம், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கான நம்பகமான விற்பனை செயல்பாடுகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருகிறது.
மேலும், புதுமையான, நம்பகமான மற்றும் வாடிக்கையாளர்களை மையமாகக் கொண்ட போக்குவரத்து தீர்வுகளை இந்தியா முழுவதும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிதில் கிடைக்கச் செய்வதில் டிவிஎஸ் அதிக கவனம் செலுத்துகிறது.