• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டிரான்ஸ் கொழுப்பை குறைப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு

November 12, 2019 தண்டோரா குழு

உணவு பாதுகாப்புத்துறை மற்றும் நுகர்வோர் அமைப்புகள் சார்பில் டிரான்ஸ் கொழுப்பை குறைப்பது குறித்து பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

கொழுப்பு அமிலங்கள் நன்மை செய்பவை மற்றும் தீமை செய்பவை என்று இரு வகைகளாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. தீமை செய்யும் கொழுப்பு அமிலங்கள் ட்ரான்ஸ் கொழுப்புகள் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. இந்த தேவையற்ற கொழுப்பினால் இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 60 ஆயிரம் பேர் வரை உயிரிழந்து வருகின்றனர். இந்த நிலையில், டிரான்ஸ் கொழுப்பு நிறைந்த உணவு பண்டங்களை தவிர்ப்பது மற்றும், டிரான்ஸ் கொழுப்பை குறைப்பது குறித்து பொதுமக்களிடையே அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, வரும் 2020ம் ஆண்டுக்குள் இந்தியாவை டிரான்ஸ் கொழுப்பு இல்லாத நாடாக மாற்ற வேண்டும் என்று உணவு பாதுகாப்புத்துறை இலக்கு நிர்ணயித்துள்ளது.

இந்த சூழலில் உணவு பாதுகாப்புத்துறை, சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் மற்றும் கோவை சிட்டிசன் வாய்ஸ் கிளப் ஆகிய நுகர்வோர் அமைப்புகள் இணைந்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தினர். அவினாசி சாலையில் உள்ள ரங்கம்மாள் பள்ளியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டு ட்ரான்ஸ் கொழுப்புகள் குறித்தும் டிரான்ஸ் கொழுப்பு உள்ள உணவுகளை தவிர்ப்பது குறித்தும், பிளாஸ்டிக் உபயோகத்தை தவிர்ப்பது குறித்தும் மாணவர்களிடையே பேசினார்.இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள், சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்சன் குரூப் அமைப்பை சேர்ந்த சவிதா திருநாவுக்கரசு மற்றும் கீர்த்தனா தங்கவேல் ஆகியோரும், கோவை சிட்டிசன் வாய்ஸ் கிளப் அமைப்பின் நிறுவனர் ஜெயராமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க