அமெரிக்காவில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 2௦) நடைபெறும் டொனால்ட் டிரம்பின் பதவி ஏற்பு விழாவில் இந்திய பாரம்பரியத்தைப் பறைசாற்றும் பாலிவுட் நடனத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கடந்த நவம்பர் 8ம் தேதி நடந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக வேட்பாளரான ஹிலாரி கிளின்டனை தோற்கடித்து அனைவரும் ஆச்சரியபடும் விதமாக டொனல்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்க நாட்டின் 45-வது குடியரசுத் தலைவராக வெள்ளிக்கிழமை பதவியேற்க உள்ளார்.
இந்த பதவி ஏற்பு விழா தலைநகர் வாஷிங்டனில் நடைபெறுகிறது. விழாவிற்கு உலக நாடுகளைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் வேகமாக நடந்து வருகிறது.இவ்விழாவில் சர்வதேச நாடுகளின் கலைவிழா நடைபெறுகிறது.
இந்திய பாலிவுட் நடனத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் இந்திய அழகி மானஸ்வி மம்கை தலைமையில் நடைபெறும் இந்த நடனத்தில் அமெரிக்க கலைஞர்கள் மற்றும் 3௦ இந்திய நடன கலைஞர்கள் பங்கேற்கவுள்ளனர்.
மும்பை நகரில் உள்ள நலசபோராவை சேர்ந்த 29 வயது நடன இயக்குநரான சுரேஷ் முகுந்த், இந்த பயிற்சியை வழங்கி வருகிறார். அவர் இந்த பொன்னான வாய்ப்பைப் பயன்படுத்தி சாதனை நிகழ்த்த திட்டமிட்டுள்ளார்.
இது குறித்து சுரேஷ் முகுந்த் கூறுகையில், “இது ஒரு வாழ்நாள் வாய்ப்பு. எனது உதவியாளர் கார்த்திக் ப்ரியதர்ஷனும் நானும் அமெரிக்க நடன கலைஞருக்கு சரிசமமாக இந்திய நட கலைஞர்கள் ஆடும் முயற்சியில் சில தினங்களாக கடுமையாக உழைத்து வருகிறோம்” என்றார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு