• Download mobile app
03 Sep 2025, WednesdayEdition - 3493
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

தினகரன் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார்

April 27, 2017 தண்டோரா குழு

இரட்டை இலை சின்னம் பெற இந்தியா தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டிடிவி தினகரனை விசாரணைக்காக தில்லி போலீசார் இன்று சென்னை அழைத்து வருகின்றனர்.

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக இரு அணிகளாக பிரிந்து செயல்பட தொடங்கியது. இதன் விளைவாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் போது இரட்டை இலை சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டது.

இதனிடையே இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு ரூ.60 கோடி வரை லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் மீது தில்லி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதனையடுத்து அவரிடம் 4 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் டிடிவி தினகரன் ஜாமின் கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.இதில் தினகரனின் ஜாமீன் மனுவை நிராகரித்த நீதிபதி, அவரை 5 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்தார்.

இதனையடுத்து விசாரணைக்காக டிடிவி தினகரனை தில்லி போலீசார்அழைத்துக் கொண்டு சென்னை புறப்பட்டனர். தினகரனுடன் கைது செய்யப்பட்டுள்ள அவரது நண்பர் மல்லிகார்ஜூனாவும் விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க