November 30, 2020
தண்டோரா குழு
சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் அளிக்கப்பட்ட மனுவில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி இஸ்லாமிய அமைப்புகள் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மனு அளிக்கப்பட்டுள்ளது.
சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக கோவை மாநகர காவல் ஆணையரிடம் மனு அளிக்கப்பட்டது. மாவட்ட பொதுச்செயலாளர் புல்லட் சேகர் தலைமையில் வழங்கப்பட்ட இதில், அயோத்தி ராமர் ஆலயம் பாபர் மசூதி பிரச்சினை நீண்ட காலமாக இருந்த நிலையில் கடந்த ஆண்டு அயோத்தி நிலம் இந்துக்களுக்கு சொந்தமானது என்ற தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியதுடன் அயோத்தியில் ஸ்ரீ ராமர் ஆலயம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாமல் இஸ்லாமிய பயங்கரவாத அமைப்புகள் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ஆம் தேதி மீண்டும் பாபர் மசூதி வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளனர். இது அமைதியான தமிழகத்தில் மத மோதல்கள் உருவாக்குவதோடு நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் படி உள்ளதாகவும் எனவே டிசம்பர் 6ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கக்கூடாது எனவும் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தும் அமைப்புகளின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
சக்தி சேனா இந்து மக்கள் இயக்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ள இந்த மனு அளிக்கும் போது கோவை மாவட்ட செயலாளர் சின்னியம்பாளையம் அணி தெற்கு மாவட்ட தலைவர் நெல்லை பாலா மாவட்ட செயலாளர் பரணி மாவட்ட அமைப்பாளர் ரஞ்சித் தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ்குமார் ஆலய பாதுகாப்பு இங்கே நகர அமைப்பாளர் முனியப்பசாமி உட்பட நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.