• Download mobile app
12 Sep 2025, FridayEdition - 3502
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிசம்பர் 4ஆம் தேதி மாலையே ஜெயலலிதா உயிரிழந்து விட்டார் – திவாகரன் வெளியிட்டுள்ள புதிய தகவலால் பரபரப்பு

January 17, 2018 தண்டோரா குழு

2016 டிசம்பர் 4-ம் தேதி மாலை 5.15 மணிக்கு ஜெயலலிதா உயிரிழந்துவிட்டார் என்று திவாகரன் தகவல் தெரிவித்துள்ளார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று 2016 டிசம்பர் 5-ம் தேதி இரவு உயிரிழந்தார்.

இந்நிலையில், மன்னார்குடியில் பொதுக்கூட்டத்தில் பேசிய சசிகலா சகோதரர் திவாகரன்,

ஜெயலலிதா 4ம் மாலை 5.15 மணிக்கே உயிரிழந்துவிட்டார். அப்போது ஜெயலலிதா இறந்ததை அறிவிக்கும்படி  அப்போலோ மருத்துவமனை நிர்வாகத்திடம் நாங்கள் முறையிட்டோம். ஆனால், அப்பல்லோ பிரதாப் ரெட்டி தமிழகம் முழுவதும் அப்பல்லோவிற்கு நிறைய கிளைகள் உள்ளன. அவற்றிற்கு உரிய பாதுகாப்பு கொடுங்கள் என்றார். இதையடுத்து, அப்போலோ நிர்வாகம் தனது மருத்துவமனைக்கான பாதுகாப்பை உறுதி செய்த பிறகே ஜெயலலிதா  இறப்பை தாமதப்படுத்தி அறிவித்தது என்றார்.

மேலும், மத்திய அரசின் கழுகு ஒன்று அந்த சமயத்தில் அப்பல்லோவில் இருந்தது. அவருக்கு வேண்டப்பட்டவருக்கு முதல்வர் பதவி வழங்க வேண்டும் என சிபாரிசு செய்தது. அவர் உயர்ந்த பதவிக்கு சென்றுவிட்டதால் அவர் பெயரைக் கூறவும் முடியாது; அவரைபற்றி விமர்சிக்க கூடாது.  என திவாகரன் கூறியுள்ளார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வரும் நிலையில் தற்போது சசிகலா சகோதரர் திவாகரன் வெளியிட்டுள்ள புதிய தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் படிக்க