• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

டிக்டாக் ரவுடி பேபி சூர்யா ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக பல்வேறு யூடியூபர்ஸ் புகார்

March 11, 2022 தண்டோரா குழு

டிக்டாக் மூலம் பிரபலமான ரவுடி பேபி சூர்யா(எ) சுப்புலட்சுமி மற்றும் அவரது நண்பர் சிக்கா ஆகிய இருவரும் ஆபாசமாக வலைதளங்களில் பதிவிடுவதாகவும் தங்களையும் மிரட்டுவதாகவும் கோவையை சேர்ந்த தம்பதியினர் அளித்த புகாரின் பேரிலும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து எழப்பட்ட புகார்களின் பேரிலும் சில தினங்களுக்கு முன் சூர்யா மற்றும் சிக்கா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவர் மீதும் தற்போது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரவுடி பேபி சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை மிரட்டுவதாக கூறி ரவுடி பேபி சூர்யா மீது புகார் அளித்தவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் புகார் தெரிவித்துள்ளனர்.கோவை மாவட்டத்தை சேர்ந்த திலகா தம்பதியினர் முதலில் புகார் அளித்த நிலையில் அவர்களுக்கு ஆதரவாக லாரன்ஸ் சூர்யா- (மாற்று திறனாளி- யூடியூபர்), உட்பட சிலர் ஆதரவு தெரிவித்திருந்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவின் ஆதரவாளர்கள் தங்களை தொலைப்பேசி மூலமாகவும் யூடியூப் மூலமாகவும் கொலை மிரட்டல் விடுவதாகவும் தங்களை பற்றி அவர்களது சேனல்களில் தரக்குறைவாக பதிவிடுவதாகவும் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மட்டுமல்லாமல் மலேசியா ஆகிய இடங்களில் இருப்பவர்கள் சிலரும் அவர்களது யூடியூப் சேனல்களில் தங்களை பற்றி இழிவாகவும் தவறுதகாவும் பதிவிடுதாக தெரிவித்தனர்.

மேலும் படிக்க