• Download mobile app
28 Mar 2024, ThursdayEdition - 2969
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

டாஸ்மாக் பார் டெண்டர் கடந்த ஆட்சிக் காலத்தை விட தற்போது 28 கோடி கூடுதலாக டெண்டர் விடப்பட்டுள்ளது – செந்தில் பாலாஜி

January 19, 2022 தண்டோரா குழு

டாஸ்மாக் ஊழியர்களை மிரட்டுவதாக புகார் அளித்தால், பார் உரிமையாளர்கள் மீது நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். கோவை மாநகராட்சியில் சூயஸ் ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு அந்நிறுவனத்தை பெயரை கூட தவிர்த்துவிட்டு அமைச்சர் பொதுவாக பதிலளித்தார்.

கோவை பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் தார்சாலை, பேவர் பிளாக் சாலை திட்டத் தொடக்க விழா தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று காலை 7 மணி முதல் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் வழங்கினார். இந்நிலையில் கோவை ஆர்எஸ் புரம் கலையரங்கில் மாவட்ட சமூக நலன் துறை சார்பாக தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தை 285 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

கோவை மாவட்டத்தில் 2008 பயனாளிகளுக்கு 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தாலிக்கு தங்கம் வழங்கப்பட்டது எனவும் கோவை மாவட்டத்தில் இன்று பல்வேறு பகுதிகளில் 39 சாலைப் பணிகளுக்கு 21 கோடி மதிப்பீட்டில் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதனை உடனடியாக முடித்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் கோவை மாவட்டத்தில் நோய்த்தொற்று அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.

கோவையில் தடையற்ற சிறுவாணி குடிநீர் திட்டம் என்பது 10 ஆண்டுகால திட்டமிடுதல் திட்டம்‌ எனக்குறிப்பிட்ட அவர் நிதி ஆதாரத்தை பெற்று சீரான குடிநீர் கிடைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் தனியார் சுயஸ் நிறுவனத்துடனான ஒப்பந்தம் ரத்து செய்யப்படுமா என்ற கேள்விக்கு, சூயஸின் பெயரை குறிப்பிடாமல், கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் பொது நிதிக்கு மாற்றப்பட்டு முறைகேடுகள் நடந்துள்ளது எனவும் அது தொடர்பான இறுதி விசாரணை முடிவடைந்த பிறகு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக்கூறினார். தமிழகம் முழுவதும் மின்சாரத் துறை சார்பாக 8 ஆயிரத்து 955 டிரான்ஸ்பார்கள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளது எனவும் இது அடுத்த 30 நாட்களுக்குள் பணிகள் முழுமையாக நிறைவடையும் எனவும் ஏற்கனவே 216 துணை மின்நிலையங்கள் அமைய அறிவிப்பு வெளியிடப்பட்டு இடம் கையகப்படுத்துதல் உள்ளிட்ட பணிகள் முடிந்து மீதம் 73 துணை மின் நிலையங்களுக்கு மட்டும் தற்போது இடங்கள் கையகப்படுத்தப்பட்டு வருவதாகவும் விரைவில் துணை மின்நிலையங்கள் அமையும் எனவும் தெரிவித்தார்.

டாஸ்மாக் பார் டெண்டர் கடந்த ஆட்சிக் காலத்தை விட தற்போது 28 கோடி கூடுதலாக டெண்டர் விடப்பட்டுள்ளது எனவும் இதன் மூலம் அரசுக்கு 12 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் டாஸ்மாக் ஊழியர்களை பார் உரிமையாளர்கள் மிரட்டுவதாக நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நாளை திமுக சார்பில் மாநகராட்சி உள்ளாட்சித் தேர்தலுக்கு விருப்ப மனு கொடுத்தவர்களுக்கான நேர்காணல் நடைபெறும் எனவும் கூட்டணி கட்சிகளுடன் பேசப்பட்டு தலைமைக்கு அனுப்பப்படும் எனவும் கூறினார். டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்று முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளது குறித்த கேள்விக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்கள் வகுத்து வருவதாகவும், சுகாதாரத்துறையினருடன் கலந்தாலோசித்து இது தொடர்பான செயல்பாடுகள் செயல்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.

மேலும் படிக்க