May 11, 2018
தண்டோரா குழு
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
கோவையில் உள்ள காட்டூர் பகுதியில் உள்ள ஏ.ஐ.டி.யூ.சி அலுவலகத்தில் தமிழ்நாடு டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில செயற்குழுவின் கூட்டம் நடைபெற்றது.
இந்த செயற்குழு கூட்டம் மாநிலத் தலைவர் பெரியசாமி தலைமையில் நடைபெற்றது.100 க்கும் மேற்பட்ட பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த செயற்குழு கூட்டத்தில் டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.மூடும் கடைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு நிரந்தர மாற்று பணி வழங்க வேண்டும்.மதுக்கூட உரிமையாளர்கள் அத்துமீறல்,திருட்டு கொள்ளை சம்பவங்கள், ஓய்வூதியம் வழங்க,உட்பட பத்துக்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.